என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டம்
காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி- கட்சியினர் போராட்டம்
பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய பிறகும் தி.மு.க. வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸ்கட்சினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் தி.மு.க.-6, அ.தி.மு.க.-3, சுயேச்சை-4, காங்கிரஸ்-1, பாமக-1, என 15 கவுன்சிலர்கள் வெற்றி பெற்று நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. தலைமை தன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அறிவித்தது.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலத்தில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் 9-வது வார்டு கவுன்சிலர் செல்வமேரி அருள்ராஜை எதிர்த்து, கூட்டணி கட்சியான தி.மு.க.வை சேர்ந்த 8-வது வார்டு கவுன்சிலர் சாந்தி சதீஸ்குமார் போட்டியிட்டார்.
இதனால் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் போட்டி வேட்பாளரான கவுன்சிலர் சாந்தி சதீஸ்குமார் 11 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வமேரிஅருள்ராஜிக்கு 4 வாக்குகள் கிடைத்தது.
பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய பிறகும் தி.மு.க. வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸ்கட்சினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story






