என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி வகுப்பு நடந்த காட்சி.
வேலூரில் அரசு ஊழியர்களுக்கு தமிழ்மொழி பயிற்சி வகுப்பு
வேலூரில் அரசு ஊழியர்களுக்கு தமிழ்மொழி பயிற்சி வகுப்பு நடந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு ஊழியர்களுக்கு தமிழ்மொழி குறித்த பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். இதில் தமிழ் மொழி குறித்து புலவர் வெற்றியழகன் பயிற்சி வழங்கினார்.
இந்தப் பயிற்சி அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அலுவலகப் பணிகள் மேற்கொள்ளும்போது தமிழ் மொழியை எவ்வாறு பிழையின்றி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் சிவராஜன் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு குறித்து விளக்கி கூறினார். இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு துறைசார்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






