என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தம்பி போலீசில் புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தம்பி போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அந்திவாடி பகுதியில் உதயகுமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் .இவர் நேற்றுமுன்தினம் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அவரது தம்பி சரவணன் (வயது29) என்பவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில், ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது அண்ணன் உதயகுமாரை, அந்திவாடி கிராமத்தை சேர்ந்த முனி எல்லப்பா என்பவரது மகன் நாகராஜ் அறிவுரையின்படி அதே பகுதியை சேர்ந்த முரளி மற்றும் வேணு ஆகியோர் முன் விரோத காரணமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் நான் ஓடி வந்து பார்த்த போது முரளி மற்றும் வேணு ஆகியோர் நாகராஜ் வீட்டிற்கு பக்கம் ஓடி ஒளிந்துகொண்டனர்.
இவர்கள் 3 பேரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்..
அதன்பேரில் தலை மறைவாக உள்ள 3 பேரையும் மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






