என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோசடி.
ஏற்றுமதி நிறுவன அதிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்றுமதி நிறுவன அதிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கணேஷ்பாபு(வயது56). இவர் பஞ்சவர்ணம் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு வாட்ஸ்அப் மூலம் கனடாவை சேர்ந்த பெஞ்சமின் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
அவர் கால்நடை தீவனம் தயா ரிக்க மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. அதனை இந்தியாவில் இருந்து கவிதா கம்பெனி மூலம் அனுப்பினால் 2மடங்கு லாபம் கிடைக்கும் என கணேஷ்பாபுவிடம் கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட கணேஷ்பாபு ஏற்றுமதி செய்வதாக உறுதி அளித்தார். அப்போது பெஞ்சமின் முன்பணம் கட்டவேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பல்வேறு தவணைகள் மூலம் ரூ.4லட்சத்து 96 ஆயிரத்தை கணேஷ்பாபு அனுப்பியுள்ளார்.
ஆனால் அதன் பிறகு பெஞ்சமினை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணேஷ்பாபு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி பெஞ்சமின், ரிச்சர்டு, கவிதாசர்மா, சந்தீப்குப்தா, ஜோதிஷா உள்பட 10பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story






