search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
    X
    ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.

    கிள்ளியூர் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ.12 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு : ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்

    கிள்ளியூர் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ.12 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.
    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்து காணப்படும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் பழுதடைந்து காணப்படும் சாலைகள், சிறிய பாலங்களை மாற்றி புதிய பெரிய பாலங்கள் அமைக்க வேண்டும் மற்றும் தடுப்பு சுவர்கள், கல் வெட்டுகள் அமைக்க வேண்டும் என்றும் தொகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். 

    நான் கிள்ளியூர் தொகுதியில் மேற்காணும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகள் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல் - அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தற்போது கீழ்காணும் பணிகளுக்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    அந்த பணிகளின் விவரங்கள் மங்காடு சாலையில் கிலோ மீட்டர் 6/8-ல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள மங்காடு பாலத்தை உயர்த்தி மறுகட்டமைப்பு செய்தல் ரூ.3 -கோடி,  வைக்கலூர் சாலையில் கிலோமீட்டர் 2/180 -முதல்  2/740 -கிலோ மீட்டர் வரை தடுப்பு சுவர் அமைத்தல் ரூபாய் 7 -கோடி,

    பரசேரி- திங்கள்நகர் - புதுக்கடை சாலையில் கிலோமீட்டர் 13/6  -ல் மத்திகோடு பாம்பூரி வாய்க்கால் குறுக்கே உள்ள பழைய பாலத்தை மாற்றி விரிவாக்கம் செய்து புதிய பாலம் அமைத்தல் ரூபாய். 50 -லட்சம், முள்ளங்கினாவிளை - தொலையாவட்டம் - கானாஞ்சேரி சாலையில் கிலோமீட்டர் 0/2 - ல் முள்ளங்கினாவிளை பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல் ரூபாய்.5 -லட்சம், 

    முள்ளங்கினாவிளை - தொலையாவட்டம் - கானாஞ்சேரி சாலையில் 0/4 -முள்ளங்கினாவிளை பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைத்து மேம்பாடு செய்தல் ரூ.10 -லட்சம், மங்காடு சாலையில் கிலோமீட்டர் 1/2 -ல் இருந்து நடைக்காவு சாலை கிலோமீட்டர் 4/4 -வரை தடுப்பு சுவர் அமைத் தல் ரூ.10 -லட்சம்,

     வட்டக்கோட்டை - அம்சி சாலையில் கிலோமீட்டர் 7/2 -ல் வேட்டமங்கலம் பகுதியில் கல்வெட்டை மறுகட்டமைப்பு செய்து மழைநீர் வடிகால் ஓடை அமைத்து மேம்பாடு செய்தல் ரூபாய்.20 -லட்சம், மங்காடு சாலையில் கிலோமீட்டர் 7/8-ல் முஞ்சிறை பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல் ரூ.5 -லட்சம், 

    மார்த்தாண்டம்-கருங்கல் சாலை - இரவிப்புதூர்கடை- குளச்சல் இணைப்பு சாலையில் கிலோமீட்டர் 6/6-ல் -0/0 முதல் 0/2 -வரை சாலை மேம்பாடு செய்தல் ரூபாய். 2.90 -லட்சம், முள்ளங்கினாவிளை - தொலையாவட்டம் - கானாஞ்சேரி (தொலையாவட்டம் - விழுந்தயம்பலம்) சாலையில் கிலோமீட்டர் 3/0 -முதல் 6/2 -வரை சாலை சீரமைத்தல் ரூபாய். 55 -லட்சம், 

    குழிவிளை- நம்பாளி ( நித்திரவிளை- தூத்தூர் சாலையில்) கிலோ மீட்டர் -5/8 - ல் உலோக தடுப்பு சுவர் அமைத்தல் ரூ.2.20 -லட்சம், வைக்கலூர் சாலையில் கிலோமீட்டர் 1/0 -முதல் 2/850 -வரை சாலை சீரமைத்தல் ரூ.32 -லட்சம்,

    வட்டக்கோட்டை  -அம்சி சாலையில் ஏற்கனவே போடப்பட்ட கிலோமீட்டர் 2/0-ல் துவங்கி கிலோமீட்டர் 4 0 -வரை பழுது பார்த்து சாலை சீரமைத்தல் ரூ.35 -லட்சம் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட இதர சாலைகளில் சாலைகள் சீரமைத்தல் மற்றும் பாலங்கள், தடுப்பு சுவர்கள் அமைக்க நெடுஞ்சாலை துறையால் 12 -கோடியே 27 -லட்சத்து 10 -ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சாலைகள் அனைத்தும் விரைவில் பணிகள் துவங்கி சீரமைக்கப்பட்டு  மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
    இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×