என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத்திட்டம் நடைபெற்றது.
கீராநல்லூர் ஊராட்சி பள்ளியில் பரிமாற்றத்திட்டம்
சீர்காழி அடுத்த கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத்திட்டம் நடைபெற்றது.
சீர்காழி
சீர்காழி அடுத்த கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத்திட்டம் நடைபெற்றது. கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மணலகரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வந்தனர்.
தலைமைஆசிரியை மேகலா தலைமை வகித்து வரவேற்றார்.தொடர்ந்து களப்பயணமாக அருகில் உள்ள அஞ்சலகம், பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு மாணவர்கள் சென்று பார்வையிட்டனர். பரிமாற்றத்திட்டத்திற்கான ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியை சுமதி செய்திருந்தார்.
முன்னதாக கீராநல்லூர் பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை பத்மாவதி, இடைநிலை ஆசிரியை பிரியா ஆகிய இருவரும் மணலகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் கீழ் சென்று உயர்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீராநல்லூர் பள்ளி வளங்கள், ஊரின் சிறப்புகள் குறித்து விளக்கி கற்பித்தார்கள்.
Next Story






