என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் பெண்ணை தாக்கிய பெயிண்டர் கைது

    கிருஷ்ணகிரியில் பெண்ணை தாக்கிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்தவர் முருகேசன்,. இவரது மனைவி வள்ளி (வயது 42). 

    அதே பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது24), பெயிண்டர்.

    இந்த நிலையில் வள்ளி குடும்பத்துக்கும், வசந்தகுமார் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.  நேற்று வசந்தகுமார், வள்ளியிடம் தகராறு செய்து வாக்குவாதம் செய்தார். அப்போது ஆத்திரத்தில் அவர் வள்ளியை தகாத வார்த்தையால் பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெயிண்டர் வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×