search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சரவணனுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கிய காட்சி.
    X
    கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சரவணனுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கிய காட்சி.

    மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உறவினர்களிடம் கலெக்டர் ஒப்படைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி கள ஆய்வின்போது அழியாநிலை  கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் மனநல காப்பகம் கண்டறியப்பட்டது.  பின்னர் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சரவணன் என்பவரும் ஒருவர். புதுக்கோட்டை அரசு மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அவருக்கு  ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் அளிக்கபட்டதன் பயனாக குணமடைந்த சரவணன் தனது அண்ணனின் அலைபேசி எண்ணை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து  சரவணன் திருப்பூர் மாவட்டம் அங்கயர்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

    உடனே அவர்களை புதுக்கோட்டைக்கு வரவழைத்தனர். இதனை அடுத்து கலெக்டர் கவிதா ராமு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் சரவணனுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அறிவுறுத்தி, அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×