search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட பழுதுகள் குறித்து ஆலை தலைமை நிர்வாகியிடம், அமைச்சர் சிவசங்கர் கேட்டறிந்த போது எடுத்த
    X
    சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட பழுதுகள் குறித்து ஆலை தலைமை நிர்வாகியிடம், அமைச்சர் சிவசங்கர் கேட்டறிந்த போது எடுத்த

    பெரம்பலூர் சர்க்கரை ஆலை பழுதில்லாமல் இயக்கப்படும்- அமைச்சர் தகவல்

    பெரம்பலூர் சர்க்கரை ஆலை பழுதில்லாமல் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
    பெரம்பலூர்:-


    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அறவை பகுதி, கரும்பு சாறு பிரித்து எடுக்கும் பகுதி, சர்க்கரை உற்பத்தி மற்றும் உலர்த்தும் பகுதி, இணை உற்பத்தி மின் நிலையம் ஆகிய பகுதிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

    இதனைத்தொடர்ந்து அமைச்சர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தற்போது ஆலை நவீனப்படுத்தப்பட்டு விட்டாலும், இதற்காக கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட எந்திரங்கள் அனைத்தும், வெயிலிலும், மழையிலும் 10 ஆண்டுகளாக அப்படியே போட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த எந்திரங்களைதான் தற்போது ஆலையில் பொருத்தியுள்ளனர். இதனால் தான் அடிக்கடி எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு வருகிறது.
     
    இனிவரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் எற்படாதவாறு, எந்திரங்கள் அனைத்தும் சரி செய்யப்படும். விவசாயிகள் கவலை அடையத்தேவையில்லை என்றார். மேலும் இனி வரும் காலங்களில் சர்க்கரை ஆலையை பழுதில்லாமல் திறம்பட இயக்க வேண்டும் எனவும் ஆலை நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    ஆய்வின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், துணை தலைமை பொறியாளர் நாராயணசாமி உட்பட ஆலை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×