search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில் வேகம் அதிகரிக்க சோதனை ஓட்டம்.
    X
    வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில் வேகம் அதிகரிக்க சோதனை ஓட்டம்.

    வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின்சார ரெயில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்

    வேகம் அதிகரிப்பதற்கான பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின்சார ரெயில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு தினந்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வர். 

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2010 டிசம்பர் 20-ம் தேதி வேளாங்கண்ணிக்கும் நாகப்பட்டினத்திற்கும் அப்போதைய தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து நாகையிலிருந்து 
    சுமார் 5 கி.மீ தொலைவு வரையிலான பகுதிகளில், மண்ணில் உரிய உறுதித் 
    தன்மை இல்லை என்பதால் இத்தடத்தில் இயங்கும் ரயில்களுக்கு 
    அதிகபட்சம் வேகம் 30 கி.மீட்டர் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    30 கி.மீட்டர் வேகம் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், மண்ணின் உறுதித் தன்மையற்ற காரணத்தால், இத்தடத்தில் 15 முதல் 20 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. 

    இதனால், நாகையிலிருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள வேளாங்கண்ணியைச் சென்றடைய ஒவ்வொரு ரயிலுக்கும் சுமார் 30 முதல் 40 நிமிடம் தேவைப்பட்டது. 

    இதனால், இத்தடத்திலான ரயில் சேவை துரித போக்குவரத்துக்குரியதாக இல்லை.

    இது குறித்த கோரிக்கைகள்படி, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டது. 

    ஏறத்தாழ சுமார் 5 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றுள்ள இப்பணி, அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக இத்தடத்திலான இருப்புப் பாதையில் கருங்கல் பேக்கிங் பணிகள் நிறைவடைந்தன.

    இந்த நிலையில், நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனைக்கான ரயில் நேற்று 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. இருப்பு பாதைகளில் புழுதி பறந்தது. 

    தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் தீபக் நாராயண காட்டோ தலைமையில் தென்னக ரயில்வே அதிகாரிகள். பங்கேற்றனர்.

    இந்த வேகச் சோதனைக்கு பிறகு, நாகை - வேளாங்கண்ணி தடத்தில் ரயில்கள் சுமார் 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

    மேலும், பொது முடக்கம் காரணமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் முடங்கியிருக்கும் வேளாங்கண்ணி ரயில் சேவையும், இந்த சோதனைக்கு பின்னர் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×