என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச மண், நீர் பரிசோதனை முகாம்
    X
    இலவச மண், நீர் பரிசோதனை முகாம்

    மண், நீர் பரிசோதனை முகாம்

    தேரழந்தூரில் இலவச மண், நீர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரிழந்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலமாக நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலமாக இலவச மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    குத்தாலம் வட்ட வேளாண்மை உதவி இயக்குனர்வெற்றிவேலன்  வழிகாட்டுதலின்படி, வேளாண் அலுவலர் திவ்யபாரதி, வேளாண் உதவி அலுவலர் வேம்பு, ஆய்வக உதவியாளர்கள் புஷ்பராஜ் சத்யமூர்த்தி, ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, முகாமை நடத்தினர். 

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வயல்களில் இருந்து மண் மற்றும் நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு பெற்றுக்கொள்ளபட்டது. ஏற்பாடுகளை பவுண்டேஷன் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×