என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலையில் கொரோனா பரவல் குறைந்ததால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினால் பலர் உயிரிழந்தனர்.
தற்போது கொரோனா 3-வது அலை அச்சம் கொடுக்கும் வகையில் அதிகரித்த போதிலும் மிக குறுகிய காலத்தில் பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கொரோனா பரவலை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இனிமேல் கொரோனா போன்ற வைரஸ் பரவல் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Next Story






