என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம்  கட்டுமான பணிகள் நடந்து வரும் காட்சி.
    X
    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வரும் காட்சி.

    வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டவில்லை

    வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை.
    வேலூர்:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.45 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு முதல் தளத்தில் வணிக வளாகம், ஆண், பெண் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பஸ் நிலையத்தில் இருபுறமும் நுழைவாயில்கள் அமைக்கப்படுகின்றன.
    பஸ் நிலையம் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பஸ்நிலையத்தில் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது.

    பஸ்நிலையத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அதன் ஒரு பகுதியில் பஸ்கள் நிறுத்துவதற்கான பிளாட்பாரங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

    அதைத்தொடர்ந்து மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவை செய்ய வேண்டும். இதனால் பஸ் நிலையப் பணிகள் முடிவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும்.

    ஏற்கனவே அறிவித்தது போல மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதிய பஸ் நிலையம் வர வாய்ப்பில்லை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×