என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் படியில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்
    X
    பஸ் படியில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்

    தியாகதுருகம் அருகே ஆபத்தை உணராத பள்ளி மாணவர்கள்

    தனியார் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாகலூர், கண்டாச்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பள்ளிக்கு வேப்பூரில் இருந்து கள்ளகுறிச்சி நோக்கி வரும் தனியார் பஸ்சில் மாணவர்கள் பலரும் வருகின்றனர்.

    இவ்வாறு பஸ்சில் வரும் மாணவர்கள் பஸ்சின் படியில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் படியில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள் தவறி கீழேவிழ வாய்ப்பு உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கும், தனியார் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×