என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணிமாறுதல் அடைந்த தலைமையாசிரியரை சால்வை அணிவித்து பாராட்டிய அமைச்சர்.
தலைமை ஆசிரியர் பிரிவுபசார விழாவில் திடீரென பங்கேற்ற அமைச்சர்
வேதாரண்யம் அருகே தலைமை ஆசிரியர் பிரிவுபசார விழாவில் திடீரென அவ்வழியாக வந்த அமைச்சர் பங்கேற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா அரசன் கட்டளை அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் மரகதவள்ளி.
இவர் பணி மாறுதல் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். நேற்று பள்ளி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் தனபாலன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி தனபாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகாலிங்கம், மாலதி பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்த பவுன் சுப்பிரமணியன் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்பொழுது வேதாரண்யம் வழியாக நாகை சென்ற அமைச்சர் விழா நடப்பதை அறிந்து காரை நிறுத்தி இறங்கி சென்று விழாவில் கலந்துகொண்டு ஆசிரியருக்கு சால்வை அணிவித்து பாராட்டி பேசினார்.
விழாவில் திடீரென அமைச்சர் வந்து கலந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story






