என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
ஓடும் ரெயிலில் லேப்டாப் திருடியவர் கைது
ஓடும் ரெயிலில் லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:
கரூரை அடுத்த புகளூரை சேர்ந்தவர் கோகுல சுந்தர். இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து மங்களூர் நோக்கி சென்ற விரைவு ரயிலில் பயணம் செய்தார்.
ரெயில் கரூர் நிலையம் வந்தபோது, கோகுலசுந்தர் இறங்கி தேனீர் அருந்திவிட்டு மீண்டும் ரெயிலில் ஏறியபோது லேப்டாப் வைத்திருந்த பை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, பயணிகள் தங்கும் அறைக்கு ஒருவர் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றதைப் பார்த்து அவருடைய அடையாளத்தை ரெயிலில் பணியில் இருந்த பழனிச்சாமி என்ற போலீசாருக்கு தெரிவித்தனர்.
அவர் ரெயில் பெட்டியில் சோதனை செய்தபோது குறிப்பிட்ட அடையாளத்தில் இருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தர்மேந்திரா குமாரை பிடித்து விசாரித்தபோது லேப்டாப் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த பெண் போலீஸ் சரண்யாவையும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் பழனிச்சாமியையும் அதிகாரிகள் பாராட்டினர்.
Next Story






