search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு - கலெக்டர் வேண்டுகோள்.

    இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத் தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது,

    மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1,67,490 குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஊரகப் பகுதிகளில் 1,309 மையங்களும், நகரப் பகுதிகளில் 47 மையங்களும் என மொத்தம் 1,356 மையங்களில் 1,67,490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
     
    இப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கென பொதுசுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 5,377 பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்  ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
      
    எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 0 முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதுடன் ‘இளம்பிள்ளைவாத நோயை ஒழித்து இளம்பிள்ளைவாத நோய் இல்லா உலகம் படைக்க” அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, ஊரக நலப்ப ணிகள் இணை இயக்குநர் ராமு, துணை இயக்குநர்கள் அர்ஜுன்குமார், கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×