என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் இன்ஸ்பெக்டர் கணேஷ், கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்ட காட்சி.
முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தினஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை காவல்துறை சைபர் கிரைம் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் சிவா கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி பள்ளி அளவிலான நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் துணை முதல்வர் மங்கையர்க்கரசி, பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவு விழாவில் அனை வருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் நெடுஞ்செழியன் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story






