என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பத்மநாபபுரம் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்
பத்மநாபபுரம் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
கன்னியாகுமரி:
பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டு களிலும் 111 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.
விறுவிறுப்பாக நடந்த பிரசாரத்தை தொடர்ந்து அங்கு கடந்த 19-ந் தேதி வாக்கு பதிவு நடந்தது. மொத்தம் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.
பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் தக்கலை அரசு மேல் நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று காலை இங்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதை தொடர்ந்து வாக்கு பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
வெற்றி நிலவரம் வருமாறு:-
1-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுதா 228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அருள் சோபன் 422 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சுலைகாபேகம் 203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
4-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மும்தாஜ் 205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
5-வது வார்டில் கிருஷ்ன பிரசாத்(சுயேச்சை) வெற்றி பெற்றார்.
6-வது வார்டில் நதீரா பானு(மதசார்பற்ற ஜனதா தளம்) வெற்றி பெற்றார்.
7-வது வார்டில் செந்தில்குமார்(சுயேச்சை) வெற்றி பெற்றார்.
8-வது வார்டில் நாகராஜன் (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
9-வது வார்டில் வினோத் (சுயேச்சை) வெற்றி பெற்றார்.
10-வது வார்டில் ஷீபா (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
11-வது வார்டில் பிரிய தர்ஷினி (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
12-வது வார்டில் ஷேக் முகமது(சுயேச்சை) வெற்றி பெற்றார்.
13-வது வார்டில் சமீனா( சுயேச்சை) வெற்றி பெற்றார்.
14-வது வார்டில் மணி (தி-.மு.க) வெற்றி பெற்றார்.
15-வது வார்டு:- கீதா (பா.ஜனதா) வெற்றி
16-வது வார்டு:- ஜெமிலா ஆரோக்கிய ராணி (தி.மு.க.) வெற்றி
17-வது வார்டு:- அபிலா (தி.மு.க.) வெற்றி
18-வது வார்டு:- சுகந்தி (தி.மு.க.) வெற்றி
19-வது வார்டு:- சிவா (பா.ஜனதா) வெற்றி
20-வது வார்டு:- உண்ணி கிருஷ்ணன் (பா.ஜனதா) வெற்றி
21-வது வார்டு:-ஸ்ரீதேவி (பா.ஜனதா) வெற்றி.
Next Story