என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஒற்றை யானை சேதப்படுத்திய பயிரை வேதனையுடன் பார்க்கும் விவசாயியை படத்தில் காணலாம்.
  X
  ஒற்றை யானை சேதப்படுத்திய பயிரை வேதனையுடன் பார்க்கும் விவசாயியை படத்தில் காணலாம்.

  5 கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றையானை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 5 கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை காட்டுக்குள் வனத்துறையினர் விரட்டி அடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காரக்பூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 5 கிராமத்தில் ஒற்றை யானை தொடர்ந்து விவசாய நிலத்தை சேதப்படுத்துவதை தடுக்கக் கோரி ஊர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

  அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

  பாலக்கோடு அடுத்த சீரியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட 5 கிராமங்களான சீரியம் பட்டி, ஈச்சம் பள்ளம், செங்கல் நத்தம், சொக்கன் கொட்டாய், கஞ்சால்பெயில், உள்ளிட்ட கிராமங்களில் ஒற்றை யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

  இதனால் தக்காளி, நெல், கரும்பு, ராகி, மக்காச் சோளம், நிலகடலை, மற்றும் தென்னை மரம், வாழைத்தோப்பு, உள்ளிட்ட விவசாய பயிர்களை கடந்த இரண்டு மாதமாக இரவு 9 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை யானை சேதப்படுத்தி வருகிறது.

  250 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை மிதித்து சேதப்படுத்தி அழித்து வருகிறது.  இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அவர்களுக்கு மனு கொடுத்தும் ரேஞ்சர் ஆகி யோரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

  மேலும் பொது மக்க ளுக்கும், விவசாயிகளுக்கு உயிர்சேதம் ஏற்படுவதற்குள் ஒற்றை யானையை  வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டு பகுதியில் விடுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

  Next Story
  ×