என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தருமபுரி நகரில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து ஆரவாரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப்பெற்ற தருமபுரி நகராட்சி அ.தி.மு.க.&தி.மு.க. வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    தருமபுரி:

    தருமபுரியில் இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பட்டாசு வெடித்து அரசியல் கட்சியினர் கொண்டாடினர். 

    தருமபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிகம் பேர் போட்டியிட்டனர். கடந்த 19-ந்தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடந்தது.

    இன்று தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. தருமபுரி நகராட்சி பகுதியில் 1-வது வார்டு முதல் 7&வது வார்டு வரை அ.தி-.மு.க  வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 8&வது வார்டு முதல் 11-வது வரை தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தனர். 

    இதையடுத்து 11-வது வார்டுக்கு பிறகு தருமபுரி நகராட்சி தேர்தலில் தி.மு.க.-அ.தி.-மு.க. ஒரே அளவில் சரி சமமாக வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளனர். 

    இதனால் தருமபுரி நகராட்சி பகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினர் வெற்றி வாகை சூடும் நிலையில் பட்டாசு வெடித்து தாரதப்பட்டை அடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

    தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அரசியல் கட்சியினர் கொண்டாடினர். மேலும் எவ்வித அசம்பாவிதம் நிகழாமல் இருக்க போலீசார் தருமபுரி பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×