என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீஸ் பாதுகாப்பு
  X
  போலீஸ் பாதுகாப்பு

  கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
  கோவை:

  கோவை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, மீதமுள்ள 802 வார்டுகளுக்கு கடந்த 19&ந் தேதி தேர்தல் நடந்தது. 

  வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மாநகராட்சியின் 100 வார்டுகளில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.இன்று காலை தேர்தல் அதிகாரிகள், சிறப்பு பார்வையாளர், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் அறை திறக்கப்பட்டது.

  தொடர்ந்து பதிவான தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதும், வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, வார்டு வாரியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் 13, 4, 5, 7, 87, 76, 71, 37, 62, 31& வது வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

  வாக்கு எண்ணுவதற்காக அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 10 அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. 1 ஒரு அறைக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, ஒரே நேரத்தில் 140 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. கோவை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 9 சுற்றுகளாக எண்ணப் படுகிறது. ஒவ் வொரு வார்டாக எண்ணி முடித்து, உடனுக்குடன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.

  வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு 2 அலு வலர்கள், ஒரு வாக்கு அறைக்கு 3 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 340 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட வந்த அலுவலர்கள், தேர்தல் முகவர்கள் அனைவருக்கும் அரசு தொழில்நுட்ப கல்லூரி நுழைவு வாயில் முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் மற்றும் கையுறைகளும் வழங்கப்பட்டது. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணும் பணியையொட்டி  அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  இதேபோல் 1.மேட்டுப்ப £ளையம் நகராட்சியில் பதிவான வாக்குகள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 2.பொள்ளாச்சி நகராட்சியில் பதிவான வாக்குகள் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், 3. வால்பாறை நகராட்சியில் பதிவான வாக்குகள் அங்குள்ள அரசு கல்லூரியிலும் எண்ணும் பணி நடந்தது.

  4.காரமடை நகராட்சி வாக்குகள் மெட்ரோ மெட்ரி குலேசன் பள்ளியிலும், 5.கூடலூர் நகராட்சி வாக்குகள் பெரியநாயக்கன் பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியிலும், 6.கருமத்தம் பட்டி நகராட்சியின் வாக்குகள் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 7. மதுக்கரை நகராட்சி வாக்குகள் ஸ்ரீநாராயணகுரு பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்பட்டது.

  33 பேரூராட்சிகளில் பதிவான வாக்கு எண்ணும் பணியும் அந்தந்த மையங்களில் நடந்தது.  8. மோப்பிரிபாளையம், சிறுமுகை, அன்னூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 9. ஆனைமலை, ஜமீன் ஊத்துக் குளி, வேட்டைக்காரன் புதூர் ஒடையகுளம் பேரூராட்சி வாக்குகள் ஆனைமலை வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டது.

  10.பெரியநாயக்கன் பாளையம், நம்பர் 4 வீர பாண்டி, நரசிம்ம நாயக்கன் பாளையம் பேரூராட்சி வாக்குள் பெரியநாயக்கன் பாளையம் பயனீர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், 11. கோட்டூர், சூளேஸ் வரன்பட்டி, சமத்தூர் பேரூராட்சி வாக்குகள் கோட்டூர் மலை யாண்டிபட்டிணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 12. ஒத்தக்கால் மண்டபம், செட்டிபாளையம், வெள்ளலூர், கிணத்துக்கடவு, பெரியநெகமம், எட்டிமடை, திருமலையாம்பாளையம் பேரூராட்சிகளின் வாக்குகள் பிரீமியர் மில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 13.எஸ்.எஸ்.குளம், இடிகரை பேரூராட்சிகளின் வாக்குகள் கோவில்பாளையம் இன்ட்ரோ இன்ஸ்டடிடியூட் பொறியியல் கல்லூரியிலும், 14. தொண்டாமுத்தூர், தாளியூர், வேடபட்டி, பேரூர் பேரூராட்சிகளின் வாக்குகள் வடவள்ளி மருதமலை தேவஸ்தான பள்ளியிலும் நடந்தது.

  15. பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை பேரூராட்சி வாக்குகள் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 16. சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளப்பாளையம் பேரூராட்சி வாக்குகள் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்து.

  17 வாக்கு மையங்களிலும் காலை முதலே விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. 17 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் மாவட்டம் முழுவதும் 140 நுண்பார்வையாளர்கள், 640க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  கோவை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணியையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தலைமையில் 2,400 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடாகம் செல்லும் ரோடு, நுழைவு வாயில், வாக்கு எண்ணும் மையம் என 3 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இதேபோல் மற்ற 16 வாக்கு எண்ணும் மையத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  Next Story
  ×