என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ திட்ட முகாமில் யூனியன் தலைவர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் பேசினார்.
வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தமிழக அரசின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி ஒன்றியம் அனுமந்தகுடி கிராமத்தில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் ராஜாராம் தலைமை தாங்கினார். அனுமந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி முத்துராமன், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரியா வரவேற்றார். வெங்களூர் மருத்துவ அலுவலர் சண்முகம் திட்ட விளக்கஉரையாற்றினார்.
இந்த முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டன. கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, தொற்றா நோய் பரிசோதனை, பல் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் கண் நோய் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பொது சுகாதார துறையை சேர்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர்.
குழந்தைகள் வளர்ச்சித்திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்காந்தி துறை சார்ந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துவேல் நன்றி கூறினார்.
Next Story