என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILE PHOTO
  X
  FILE PHOTO

  திருச்சி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றுகிறது.
  திருச்சி:

  திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிக ளில்   நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 61.36 சதவீத ஓட்டு பதிவானது.

  திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில் மாநகராட்சியில் 7,79,658 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் திருச்சி மாநகராட்சியில் 57.25 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.

  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் காலை 8   மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். இதையடுத்து மின்னணு எந்திரத்தில்  பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

  இதில் வார்டுகள் வாரியாக வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

  1-வது வார்டு லட்சுமி தேவி (தி.மு.க.), 2-வது வார்டு ஜவகர் (காங்கிரஸ்), 3-வது வார்டு செல்வி (தி.மு.க.), 6-வது வார்டு கலைமணி (தி.மு.க.), 9-வது வார்டு நாகலட்சுமி, அறிவுடைநம்பி (தி.மு.க.)

  13-வது வார்டு மணிமேகலை (தி.மு.க.), 15-வது வார்டு தங்கலட்சுமி (தி.மு.க.), 17-வது வார்டு பிரபாகரன் (வி.சி.க.), 18-வது வார்டு சண்முகபிரியா (தி.மு.க.), 23-வது வார்டு சுரேஷ் குமார் (இந்திய கம்யூ.), 24-வது வார்டு சோபியா விமலா ராணி (காங்கிரஸ்)

  25-வது வார்டு நாகராஜன் (தி.மு.க.), 26-வது வார்டு விஜயலட்சுமி (தி.மு.க.), 29-வது வார்டு கமால் முஸ்தபா (தி.மு.க.), 30-வது வார்டு கதீஜா (ம.தி.மு.க.), 31-வது வார்டு சுஜாதா (காங்கிரஸ்), 32-வது வார்டு ஜெயநிர்மலா (தி.மு.க.), 33-வது வார்டு திவ்யா (தி.மு.க.)

  34-வது வார்டு மண்டி சேகர் (தி.மு.க.), 36-வது வார்டு கார்த்திகேயன் (தி.மு.க.), 39-வது வார்டு ரெக்ஸ் (காங்கிரஸ்), 40-வது வார்டு சிவக்குமார் (தி.மு.க.), 41-வது வார்டு கோவிந்தராஜ் (காங்கிரஸ்), 43-வது வார்டு செந்தில் (தி.மு.க.), 44-வது வார்டு பியூலா மாணிக்கம் (தி.மு.க.)

  45-வது வார்டு சீதாலட்சுமி (தி.மு.க.), 47-வது வார்டு செந்தில்நாதன் (அ.ம-.மு.க.), 48-வது வார்டு தர்மராஜ் (தி.மு.க.), 57-வது வார்டு முத்துசெல்வம் (தி.மு.க.), 58-வது வார்டு கவிதா செல்வம் (தி.மு.க.), 61-வது வார்டு ஜாபர் அலி (தி.மு.க.), 62-வது வார்டு சுபா (தி.மு.க.), 63-வது வார்டு பொற் கொடி (தி.மு.க.)

  இவை தவிர மற்ற வார்டு களிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். எனவே திருச்சி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.
  Next Story
  ×