என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி.
  X
  விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி.

  மகா மாரியம்மன் கோவில் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோகனூர் அருகே தீர்த்தாம்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
  பரமத்திவேலூர்:

  மோகனூர் அருகே தீர்த்தாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 14-ந் தேதி கம்பம் ஊன்றி, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினசரி பல்வேறு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

  நேற்று முன்தினம் வடிசோறு பூஜையும், நேற்று பக்தர்கள் மணப்பள்ளி காவிரி ஆற்றில் புனித நீராடி கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  இதையடுத்து இரவு மாவிளக்கு நடைபெற்றது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கிடா வெட்டுதலும், நாளை (புதன்கிழமை) அதிகாலை கம்பம் பிடிங்கி மணப்பள்ளி காவிரி ஆற்றில் விட்டு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×