என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.

    நாரணம்மாள்புரம், சங்கர்நகர் பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது -அ.தி.மு.க.-அ.ம.மு.க. தலா 2 இடங்களை பிடித்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லையில் நாரணம்மாள்புரம், சங்கர்நகர் பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. தலா 2 இடங்களை பிடித்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று நடந்தது.  ஓட்டு எண்ணிக்கை முடிவில் 12 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், அ.ம.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்று உள்ளது.

    நாரணம்மாள்புரத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட் பாளர்கள் 1-ராஜேஸ்வரி, 3-மகாலிங்கம், 4-சேர்ம லிங்கம், 7-ராமலட்சுமி, 8-செல்வி, 9-ராமலட்சுமி, 10-கவிதா, 11- மாதவி, 12- உமா மகேஸ்வரி, 13- பிச்சம் மாள், 14- பாப்பாத்தி, 15- மல்லிகா இதுதவிர 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பேச்சி யம்மாள், 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பால் மாயாண்டி, 5-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் ஈனமுத்து ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

    சங்கர்நகர் பேரூராட்சியை பொறுத்தவரை மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 11 வார்டுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று பேரூராட்சி யை கைப்பற்றி உள்ளது. இதில் 4-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்று உள்ளார். அ.தி.மு.க. ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

    தி.மு.க. சார்பில் 1-கிருஷ்ணம்மாள், 2- மாரியம்மாள், 3- சுடலை முத்து, 5- ஆறுமுகசெல்வி, 6- தங்கம், 7-நாகூர் மைதீன் ஜெய்லானி, 8-முத்துராஜா, 9-அருணாசலம், 10-செல்வ குமார், 11-விஜயலட்சுமி, 12- பட்டு லட்சுமி ஆகிய வேட் பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
    Next Story
    ×