என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நாகர்கோவில் அருகே மகளிர் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகர்கோவில் அருகே மகளிர் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள மகளிர் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நள்ளிரவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ஒன்று வந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் அது புரளி என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு குறித்து தகவல் கொடுத்த நபரின் கைப்பேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story