என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன்பு 1500 போலீசார் பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன்பு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. இது தவிர பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு தனித்தனி இடங்களில் வாக்கு எண் ணிக்கை நடந்தது. மொத்தம் 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
காலை 8 மணிக்கு அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை யொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனும திக்கப்பட்டனர். முகவர்களின் செல்போன் உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. முகவர்கள் தங்கள் கையில் எந்தவித பொருள்களும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
பலத்த சோதனைக்குப் பிறகே முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 100 மீட்டருக்குள் எந்த வித வெற்றி கொண்டாட்டங்களும் கூடாது என காவல்துறை எச்சரித்து இருந்தது. அதன் படி வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி பேரூராட்சி பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் சிறப்பு ரோந்து படைகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது.
Next Story