என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை
    X
    குழித்துறை

    குமரி மாவட்ட நகராட்சிகள் நிலவரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொல்லங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. அதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டுகளிலும், பாரதிய ஜனதா 5 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
    குழித்துறை நகராட்சி (தி.மு.க. கூட்டணி வெற்றி)

    குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 6 இடங்களையும், கம்யூனிஸ்ட் 5 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் என 15 இடங்களில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது. அதேபோல் பா.ஜ.க. 5 இடங்களையும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    குளச்சல் நகராட்சி (தி.மு.க. கூட்டணி வெற்றி)

    குளச்சல் நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்களிலும் என மொத்தம் 13 இடங்களில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. ஒரு இடத்திலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    பத்மநாபபுரம் நகராட்சி (தி.மு.க.-பா.ஜ.க. இடையே போட்டி)

    பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை தலா 7 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., பா.ஜ.க. தலா 7 இடங்களை பிடித்துள்ளதால் சுயேட்சைகள் ஆதரவளிக்கும் கட்சிகள் நகராட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது.

    கொல்லங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. அதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டுகளிலும், பாரதிய ஜனதா 5 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் தே.மு.தி.க.வும் வெற்றி பெற்றுள்ளது.

    Next Story
    ×