என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்காவை கட்டிப்பிடித்து வெற்றியை கொண்டாடினர்.
    X
    வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்காவை கட்டிப்பிடித்து வெற்றியை கொண்டாடினர்.

    வேலூர் மாநகராட்சியில் 15 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா

    அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழை பெற்றுக்கொண்ட வேட்பாளர் கங்கா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டன. இதில் 37-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா 2131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரியா 2116 வாக்குகள் பெற்றார். 15 ஓட்டு வித்தியாசத்தில் திருநங்கை கங்கா வெற்றியை பிடித்தார்.

    அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழை பெற்றுக்கொண்ட வேட்பாளர் கங்கா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வேட்பாளர் கங்காவை திருநங்கைகள் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
    Next Story
    ×