என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.
  X
  அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.

  கன்னியாகுமரி அருகே ஓட்டுஎண்ணும் மையத்துக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் வேட்பாளர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கைக்குழந்தையுடன் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்த ஒரு பெண் வேட்பாளரை போலீசார் கைக்குழந்தையை கொண்டு செல்ல கூடாது என்றனர்.

  கன்னியாகுமரி:

  அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, மருங்கூர், தேரூர், சுசீந்திரம், ஆகிய10 பேரூராட்சிகள்மற்றும் ராஜக்கமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புத்தளம் பேரூராட்சியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

  முன்னதாக கல்லூரியின் நுழைவாயிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் திரண்டுஇருந்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

  காலை 7 மணி முதல் கடுமையான சோத னைக்கு பிறகே ஓட்டு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஓட்டு எண்ணும் மைய முகவர்கள் செல்போன் மற்றும் பேனா போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

  அப்போது கைக்குழந்தையுடன் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்த ஒரு பெண் வேட்பாளரை போலீசார் கைக்குழந்தையை கொண்டு செல்ல கூடாது என்றனர்.

  இதைத்தொடர்ந்து அந்த பெண் வேட்பாளர் தான் கொண்டுவந்த கைக்குழந்தையை தனது அண்ணனிடம் ஒப்படைத்து விட்டு ஓட்டு எண்ணும் மையத்துக்கு சென்றார்.

  அந்த கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் ஓட்டு எண்ணும் முகவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். ஒவ்வொரு பேரூராட்சிகளின் வார்டு வாரியாக ஓட்டு எண்ணும் போதுஓட்டுஎண்ணும் மையத்துக்குமுகவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

  ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டு எண்ணும் மையமான அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முன்பு நிறுத்தப்பட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

  Next Story
  ×