என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 118 மேஜைகளில் எண்ணப்படுகிறது

    ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சியில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் பட்டாபிராம் இந்து கல்லூரி மையத்தில் 21 மேஜைகளில் எண்ணப்படுகிறது.

    திருவள்ளூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 118 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகரா ட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு வாக்கு பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    இதில் 315 வார்டுகளில் 825 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 8 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் நேரலை சி.சி.டி.வி. கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சியில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் பட்டாபிராம் இந்து கல்லூரி மையத்தில் 21 மேஜைகளில் எண்ணப்படுகிறது.

    பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் தலா 8 மேஜைகளிலும் திருமழிசை பேரூராட்சி 3 மேஜைகளிலும், பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    திருத்தணி நகராட்சிக்கு திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கலைக்கல்லூரியில் 7 மேஜைகளிலும், திருவள்ளூர் நகராட்சிக்கு திருப்பாசூரில் உள்ள திருமுருகன் கலைக்கல்லுரியில் 12 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    பொன்னேரி நகராட்சிக்கு உலகநாதன் கலைக்கல்லூரியில் 7 மேஜைகளிலும், ஆரணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, நாரவாரி குப்பம் பேரூராட்சிகளுக்கு பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் தலா 3 மேஜைகளிலும், பொதட்டூர் பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சிகளுக்கு பள்ளிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்ள்ளியில் 3 சுற்றுகளாகவும், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 3 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகள் குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்டசியில் 18 வார்டுகளில் தேர்தல் நடந்துள்ளது.

    இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை காரப்பேட்டை பொன்னேரி கரையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடக்கிறது.

    குன்றத்தூர்-மாங்காடு நகராட்சிகளுக்கு சிறுகளத்தூரில் உள்ள மாதாபொறியியல் கல்லூரியல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 35 மேஜைகளில் 61 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் 16 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

    குன்றத்தூர் நகராட்சி 6 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், மாங்காடு நகராட்சி 6 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், ஸ்ரீபெரும்புதூர், உத்திர மேரூர் பேரூராட்சிகள் தலா 3 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும் எண்ணப்படுகிறது.

    இதேபோல் வாலாஜாபாத் பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை 3 மேஜைகளில் 9 சுற்றுகளாக நடக்கின்றன. வாக்கு எண்ணிக்கையையொட்டி கூடுதல் பாதுகாப்பு போட போலீசார் முடிவு செய்து இருந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் நகராட் சிகளுக்கு காட்டாங் கொளத்தூரில் உள்ள ஜே.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், செங்கல்பட்டு நகராட்சிக்கு செங்கல்பட்டில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மதுராந்தகம் நகராட்சிக்கு மதுராந்தகத்தில் உள்ள சவுபாக்மல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அச்சிறுப்பாக்கம், கருங்குழி பேரூராட்சிகளுக்கு அச்சிறுப்பாக்கத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு கடப்பாக்கத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியிலும்,

    மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளுக்கு திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மொத்தம் 92 மேஜைகளில் 91 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் அதிகபட்சமாக 49 மேஜைகளில் 20 சுற்றுகளாக நடைபெறுகிறது.

    Next Story
    ×