என் மலர்
உள்ளூர் செய்திகள்

நுண்பார்வையாளர்கள்
நீலகிரியில் வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க 45 நுண்பார்வையாளர்கள் நியமனம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்படுகிறது
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்படுகிறது. ஊட்டி நகராட்சி, குன்னூர் நகராட்சி, நெல்லியாளம், கூடலூர் நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளில் பதிவான வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாது காப்புடன் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு அதிகாரிகள் முன்னி லையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்க கூடிய அறை பூட்டி சீல் வைக்கப் பட்டது. தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 61 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒரு மேஜையில் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், உதவியாளர், மேற்பார்வை யாளர் என 3 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு நுண்பார்வையாளர்கள் தலா 3 பேர் என மொத்தம் 45 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் வரும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வாகனங்கள் நிறுத்த மைதானத்தில் அனுமதி இல்லை. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Next Story






