என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் 13 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
    X
    நீலகிரியில் 13 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

    நீலகிரியில் 13 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண் ணிக்கை தொடங்குகறிது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.பின்னர் எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வார்டு வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்ப்பாடு பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது.

    ஓவேலி பேரூராட்சி, கூடலூர் நகராட்சிகளுக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் வாக்கு எண்ணப்படுகிறது.ஊட்டி நகராட்சிக்கு ஊட்டி ரெக்ஸ் மேல்நிலை ப்பள்ளியும், குன்னூர் நகராட்சிக்கு புனித அந்தோணியார் பள்ளியிலும், நெல்லியாளம் நகராட்சிக்கு பந்தலூர் பஜார் புனித பிரான்சிஸ் சேவியர் ஆரம்பப்பள்ளியிலும் வாக்கு எண்ணப்படுகிறது.

    நடுவட்டம் பேரூராட்சிக்கு நடுவட்டம் அரசு உயர்நிலை பள்ளியிலும், தேவர்சோலை பேரூராட்சிக்கு தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளயிலும், உலிக்கல் பேரூராட்சிக்கு சேலாஸ் சிறுமலர் ஆரம்ப பள்ளியிலும், ஜெகதளா பேரூராட்சிக்கு அருவங்காடு பேரூராட்சி அலுவலக கட்டிடம், கேத்தி பேரூராட்சிக்கு சாந்தூர் சிஎஸ்ஐ., மேல்நிலை பள்ளி, கோத்தகிரி பேரூராட்சிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம், அதிகரட்டி பேரூராட்சிக்கு அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியிலும், சோலூர் பேரூராட்சிக்கு நாகர்தனை அரசு மேல்நிலை பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் பதிவான வாக்குகள் 9 சுற்றுகளாகவும், குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளில் பதிவான வாக்குகுள் 4 சுற்றுகள், கூடலூர் நகராட்சி 21 வார்டுகளில் 11 சுற்றுகள், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளில் 5 சுற்றுகளா கவும் எண்ணப் படுகிறது.

    அதிகரட்டி பேரூராட்சியில் 17 வார்டுகளில் 6 சுற்றுகள், பிக்கட்டி பேரூராட்சியில் 14 வார்டுகளில் 8 சுற்றுகள், தேவர்சோலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 6 சுற்றுகள், உலிக்கல் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 9 சுற்றுகளாவும் எண்ணப்படுகிறது.

    ஜெகதளா பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகள், கேத்தி பேரூராட்சிகயில் 15 வார்டுகளில் 7 சுற்றுகள், கீழ்குந்தா பேரூராட்சியில் 21 வார்டுகளில் 8 சுற்றுகள், நடுவட்டம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.ஓவேலி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 6 சுற்றுகள், சோலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    Next Story
    ×