search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருச்சி மாநகராட்சி 64 ஆவது வார்டில் குறைந்தது வாக்கு சதவீதம்

    திருச்சி மாநகராட்சியில் மிகவும் குறைந்தபட்சமாக 64&வது வார்டில் 39.92 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளன.
    திருச்சி:

    நடந்து முடிந்த திருச்சி மாநகராட்சி தேர்தலில் 57.11 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். இதில் 29&வது வார்டில் அதிகபட்சமாக 66.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்த வார்டில் உள்ள 13, 391 மொத்த வாக்காளர்களில் 8, 922 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். இந்த வார்டில் சின்னசாமி நகர், அண்டகொண்டான், காஜாதோப்பு, காயிதே மில்லத் நகர், ஜாகிர்உசேன் நகர், ஆழ்வார்தோப்பு, ஹிதாயத் நகர் ஆகிய பகுதிகள் வருகின்றன.

    இஸ்லாமியர்கள் ஏறத்தாள 99 சதவீதம்பேரும் வாக்களித்துள்ளதால் மேற்கண்ட வார்டில் சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று குறைந்த பட்சமாக 64&வது வார்டில்  வெறும் 39.92 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

    இந்த வார்டில் ஆசாத் நகர், ஜெயநகர், முருகவேல் நகர், பழனிநகர், காவலர் குடியிருப்பு, மகாலெட்சுமி நகர், கே.கே. நகர் பகுதி, கவிபாரதிநகர் ஆகிய  பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வார்டில் வாக்குசதவீதம் குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

    75 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கவில்லை என்றார்கள். மேலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பில் தங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் கட்சியினரே கோபித்துக்கொண்டு வாக்களிக்க வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றனர்.

    ஆசாத்நகர் உள்ளிட்ட சில தெருக்களில் வி.ஐ.பி.க்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் சிலரும் வாக்களிக்கவில்லை என்கிறார்கள். அக்கம் பக்கம் வார்டுகளை போல இந்த வார்டில் கவனிப்புகள் இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்க கூடும் என சொல்லப்படுகிறது.
    Next Story
    ×