என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு செல்லும் சாலையை திறக்க மக்கள் கோரிக்கை
தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு செல்லும் சாலையை திறக்க மக்கள் கோரிக்கை
சாலைகள் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் சாலையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட் டியில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரம் தமிழகத்தில் மிக உயர்ந்த மலைச் சிகரமாகும். நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த தொட்டபெட்டா மலைச் சிகரத் துக்கு வருகை புரிந்து தொலை நோக்கி மூலம் நகர்ப்பகுதிகளை மட்டுமல்லாமல் இயற்கை காட்சிகளையும் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தொட்டபெட்டா செல்லும் சாலை சேதமடைந்தது. இதையடுத்து மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த நவம்பர் மாதம் 30 லட்சம் மதிப்பில் சாலை பணி தொடங்கப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
நவம்பர் மாதம் முதல் நடை பெற்ற சாலை பணிகள் காரணமாக சுற்றுலாப்பயணிகள் தொட்ட பெட்டா மலைச் சிகரத்துக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.தற்போது சாலை பணிகள் முடிந்ததால் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லக் கூடிய சாலையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.றுத்த மைதானத்தில் அனுமதி இல்லை. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Next Story






