என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைத்த காட்சி
    X
    செய்யாறில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைத்த காட்சி

    செய்யாறில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைப்பு

    செய்யாறில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுக்கு தேர்தல் நடைபெற்றது. 40 வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டது. 

    பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமன் அறைக்கு சீல் வைத்தார். 

    போலீசில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அறைக்கு   சீல் வைக்கப்பட்டது.
    Next Story
    ×