search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    மத்திய மண்டலத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

    மத்திய மண்டலத்தில் தேர்தல் சூறாவளியால் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாக குறைந்தது.
    திருச்சி:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  தேதி  அறிவிக்கப்பட்ட போது  திருச்சி,  தஞ்சாவூர், திருவாரூர்,   நாகப்பட்டினம், மயிலாடுதுறை    உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் தினசரி கொரோனா    தொற்று   2 ஆயிரத்தை  தாண்டி  இருந்தது. இந்த நிலையில் தேர்தல்    அறிவிக்கப்பட்டால் வைரஸ்  தொற்று   மேலும் பரவக்கூடும்  என  அச்சம் எழுந்தது.

    ஆளுங்கட்சியினரை  பலரும் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். தேர்தலுக்காக பள்ளி, கல்லூரிகள் திறக்கப் படுகின்றன.  தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை கள்  அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது    என்றெல்லாம் விமர்சித்தனர்.ஆனால் தேர்தல் வெப்பக் காற்றை எதிர்கொள்ள முடியாமல்   ஒமிக்ரான், கொரோனா   வைரஸ்கள் ஓடி ஒளிந்து கொண்டதாக வேடிக்கையாக சொல்கிறார்கள். தேர்தல் சூறாவளியில் ஒமிக்ரான் கொரோனா சுருண்டு விட்டது.

    இந்த சூழலில்  கொரோனா   கட்டுக்குள்   வந்ததை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். மருத்துவ வல்லுநர்களின் கணிப்பு   பொய்க்கவில்லை. திருச்சி உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில்  நேற்றைய தினம் 98 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

    நேற்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக திருச்சியில் 34 பேருக்கும், 2வதாக தஞ்சாவூரில் 19 பேருக்கும், திருவாரூ ரில் 12 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதியானது.

    மேலும் கரூர் மாவட்டத் தில் 9 பேருக்கும், புதுக்கோட்டையில் 7 பேருக்கும், அரிய லூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தலா 3 பேருக்கும், மயிலாடுதுறையில் ஒருத்தருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    100&க்கு  கீழ்  தொற்று சரிந்துள்ளதால்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்த கட்சியினர், பொது  மக்கள்,  வாக்காள பெருமக்கள்  அனைவரும் தப்பித்து கொண்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
    Next Story
    ×