என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலம்ப போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.
    X
    சிலம்ப போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.

    திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

    திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
    திருச்சி:

      திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் திருச்சி மாவட்டம் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டிக்கு பூர்ண புஷ்கலா தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  போட்டியில் வீரர், வீராங்கனைகள் ஒருவருக்கொருவர் மோதி தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர்.

    போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.  

    இதுகுறித்து சிலம்ப பயிற்சியாளர் மதன் கூறியதாவது இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் அடுத்த படியாக நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு கலந்து கொள்ள தகுதி பெறுவர். அதனால் இந்த போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

    அதிகமானோர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×