என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர்கள்
    X
    வாக்காளர்கள்

    நீலகிரி மாவட்டத்தில் குளிரை பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த வாக்காளர்கள்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    ஊட்டி:


    நீலகிரி மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்கா ளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். 

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூ ராட்சிகளில் 183 வார்டுகள் என மொத்தம் 291 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1,253 பேர் களத்தில் உள்ளனர். 
     
    மொத்த  வாக்காளர்கள் 3 லட்சத்து 23 ஆயிரத்து 111 பேர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 380 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 723 பேர். 3&ம் பாலினத்தவர் 8 பேர் உள் ளனர். 

    இவர்கள் வாக்களிக்க வசதியாக 15 உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் இன்று காலை குளிரையும் பொருட் படுத்தாமல் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். 

    சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டது. அந்த பிரச்சினைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. தேர்தலையொட்டி வாக்கா ளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் பூத் சிலிப், வாக்காளர் அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அடை யாள அட்டைகளுடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்காளர்களின் கை விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. 

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 55 வாக்குச்ச £வடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகளாக கண்ட றியப்பட்டது. அந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    மேலும் 350 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதிகளை ஒட்டிய வாக்குச்சாவடிகளில் நக்சல் தடுப்பு பிரிவினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×