search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு  நடைபெற்றது.
    X
    மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    குழித்துறை நகராட்சி, இடைக்கோடு பேரூராட்சியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது

    குழித்துறை நகராட்சி, இடைக்கோடு பேரூராட்சியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது.
    கன்னியாகுமரி:

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டுக்கான வாக்குப்பதிவு மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. 

    இங்கு வாக்கு பதிவுக்கு கொண்டு வரப்பட்ட எந்திரம் பழுதடைந்து காணப்பட்டதால் வாக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் வாக்குச்சாவடி முகவர்கள் அனுமதியுடன் எந்திரத்தை சரி செய்தனர். அதன்பின்பு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதனால் அங்கு அரை மணி நேரம் வாக்குப்பதிவு காலதாமதமானது. மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்தது. அதே போல இடைக்கோடு பேரூராட்சியில் 2-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை, இதனையடுத்து அதனை சரிசெய்து மீண்டும் அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    குறிப்பாக குழித்துறை நகராட்சி, பாகோடு பேரூராட்சி, உண்ணாமலைக்கடை பேரூராட்சி, நல்லூர் பேரூராட்சி, இடைக்கோடு பேரூராட்சி, பளுகல் பேரூராட்சி, களியக்காவிளை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இப்பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×