என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி முக்கியமானது.
இங்கு, வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை, விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, நீர்வீழ்ச்சியில் குளிப்பது வழக்கம்.
இங்குள்ள வெற்றிவேல் முருகன் கோயில் லிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் அதை காணவும் பக்தர்களும் அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நீர் வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
Next Story






