என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு படை வீரர்கள் தீணை அணைத்தனர்.
வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் மின்கம்பி உரசியதால் தீ விபத்து
பாபநாசம் அருகே வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே மட்டையாந்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 50). இவருக்கு சொந்தமான மினி லாரியில் மதகரம் கிராமத்தில் வைக்கோல் போரை ஏற்றுக் கொண்டு வயல் வழியாக வந்தபோது அந்த வழியாக சென்ற மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்தது.
அப்போது டிரைவரும், கிளீனரும் கீழே குதித்து விட்டனர். தீ மளமளவென்று பரவி 40 கட்டுகள் முழுவதும் எரிந்து கருகியது. மினி லாரிக்கும் சேதம் ஏற்பட்டது. ரூ.10 ஆயிரம் மதிப்பில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
Next Story






