search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையில் சோதனை மேற்கொண்ட காட்சி.
    X
    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையில் சோதனை மேற்கொண்ட காட்சி.

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி தேதி குறிப்பிடாத கேன்கள், பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி மற்றும் கொரவாண்டள்ளி குடிநீர் சுத்திகரிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பாலக்கோடு, மாரண்டள்ளி பெரியாம்பட்டி, காரிமங் கலம் பகுதிகளில் உள்ள குளிர் பான மொத்த விற்பனை நிலையங்கள் பேக்கரிகள், பழக் கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்டவற்றில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் திடீர் ஆய்வு செய்தார்.

    குடிநீர் கேன்கள், பாட்டில்கள் உரிய முறையில் தேதி போடப்படாமலும் குளிர் பானங்கள் காலாவதியானவை விற்கப் படுவதாக தருமபுரி மாவட்ட கலெக்டர்  அலுவலகத்திற்கு புகார் வந்தது. 

    அந்த புகாரின் அடிப் படையில் கலெக்டர் திவ்ய தர்சினி உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினரோடு ஆய்வு நடத்தினர்.

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் ஆய்வில் சில குறைபாடுகள் காணப்பட்டது. தேதி இல்லாத கேன்கள், பாட்டில்கள் பறிமுதல் செய்து உரிய தேதி போட்டு அனுப்பவும் நிலையங்கள் குறைபாடுகள் களைய மேம்பாட்டு அறிவிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 

    சில கடைகளில் காலா வதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்த அழிக்கப் பட்டது. மேலும் உரிய தயாரிப்பு தேதி இல்லாத திண்பண்டங்களும் பறிமுதல் செய்து எச்சரித்து எச்சரிக்கை நோட்டீஸ் மற்றும் உடனடி அபாரதம் இரணடு கடைகளுக்கு போடப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.

    Next Story
    ×