என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்யாணசுந்தரர் வீதியுலா
தியாகராஜ சுவாமி கோவிலில் கல்யாணசுந்தரர் வீதியுலா
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ திருவிழாவில் பூத கணங்களுடன் கல்யாணசுந்தரர் வீதியுலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று கோவில் வளாகத்தில் இருந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் கல்யாணசுந்தரர் பூத கணங்களுடன் எழுந்தருளினார்.
பின்னர் வாணவேடிக்கையுடன் அலங்கார நான்கு சக்கர வாகனத்தில் வீதி உலாவாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ச்சியாக நாளை பூதகணங்களின் உதவியோடு நெல் மலையை ஆரூர்&க்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Next Story






