என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூரில் உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசிய 2 பேர் கைது

    வேலூரில் உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூரில் உள்ளூர் கட்டணத்தில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சவுதி, அரேபியா, ஓமன், கத்தார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இன்டர்நேஷ்னல் (ஐஎஸ்டி) அழைப்புகளை ஆப்மூலமாக வழங்கி வந்தனர். 

    இதனால், தொலைத்தொடர்பு துறைக்கு தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதை பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

    சத்துவாச்சாரி தாட்கோ நகரில் உள்ள கடையை வாடகை எடுத்து, 4 பேர் வீட்டு உபயோக பொருளான பிரிட்ஜ் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தனர். இவர்கள் கூட்டாக சேர்ந்து உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு அழைப்பு வழங்கியது தெரியவந்தது.

    இந்நிலையில், இவர்களின் கடைக்கு தனிப்படை போலீசார் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்றிரவு சென்றனர். கடையில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    தாட்கோ நகரில் உள்ள கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கிருந்த ஆவணங்கள் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வற்றை அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    கடையில் இருந்து நவீன கருவிகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சாதரணகட்டண அழைப்பில் எப்படி வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டார்கள் எந்தெந்த நாடுகளுக்கு யாரிடம் பேசப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்தனர். இந்த சம்பவம் வேலூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாட்கோ நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 27) கொணவட்டத்தை சேர்ந்த நவாஸ் ஷெரீப் (26) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் சைதாப் பேட்டையை சேர்ந்த பாவோ ஷரீப் (26) கொணவட்டம் சல்மான் ஷரீப் ஆகியோரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×