என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1056 போலீசார்- 23 நடமாடும் வாகனங்களில் கண்காணிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 384 வாக்குபதிவு மையங்களில் வாக்கு பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
2 ஏ.டி.எஸ்.பி, 8 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் இன்ஸ்பெக்டர்கள், 926 காவலர்கள் என மொத்தம் 1,056 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசாரை நியமனம் செய்து, அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா காவல் அரங்கில் நடை பெற்றது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் போட்டியிடுகின்றனர். தேர்தலில் ஏதேனும் பிரச்சினை உருவாக்க நினைப்பவர்கள் முழுக்க முழுக்க காவல்துறையை தான் குறிவைப்பார்கள். அதனால் காவல்துறையினர் அனைவரும் கவனமாகவும், நடுநிலைமையோடும் செயல்பட வேண்டும்.
சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும் என தெரிந்தவுடன் அதனை வீடியோ பதிவு செய்யவேண்டும்.
தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறும் அறிவுரைகளையும் ஏற்று கவனத்துடன் பணியாற்ற வேண்டும். 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.






