என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட காட்சி,
    X
    தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட காட்சி,

    குடியாத்தத்தில் காரில் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பறிமுதல்

    குடியாத்தம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சிக்கு வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதனையொட்டி குடியாத்தம் நகருக்கு வெளியூரிலிருந்து வரும் முக்கிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்தும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மாலையில் தேர்தல் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பலநேர்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும் வேலூர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், காவலர் வசந்தப்ரியா உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது காரில் ரூ.5 லடசம் இருந்தது.காரில் வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி சாத்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷம்ஷுர்அலி அவரது மனைவி பர்வீன் என தெரியவந்தது அவர்கள் குடியாத்தம் பகுதியில் நகை வாங்க லட்சம் பணத்துடன் செல்வது தெரியவந்தது. 

    அவர்களிடம் 5 லட்ச ரூபாய்க்கான உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் குடியாத்தம் நகராட்சி தேர்தல் பார்வையாளர் வெங்கட்ராமன், குடியாத்தம் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான திருநாவுக்கரசு ஆகியோர் வசம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×