என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி பள்ளி குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்.
காட்பாடியில் வாக்கு சாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
காட்பாடி பள்ளி குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர் பிரதாப் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், தேர்தல் பார்வையாளர் பிரதாப், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகா£¤கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் ,மின்சார வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
Next Story






