என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் ஆய்வு செய்த காட்சி.
குடியாத்தத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி குடியாத்தத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம்:
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வேலூர் மாவட்ட மேலிட தேர்தல் பார்வையாளர் எம்.பிரதாப் திடீர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை வேலூர் மாவட்ட மேலிட தேர்தல் பார்வையாளர் எம்.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் 91 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவை முன்னிட்டு அனுப்பி வைக்கப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார், வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பொருட்கள் முகக் கவசங்கள், கையுறைகள் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையம் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தையும் வேலூர் மாவட்ட மேலிட தேர்தல் பார்வையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story






